உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடலுார் நகராட்சியில் ரூ.3.48 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

கூடலுார் நகராட்சியில் ரூ.3.48 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

பெ.நா.பாளையம், ; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 3.48 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான துவக்க விழா நடந்தது.கூடலூர் நகராட்சி வட்டப்பாறை புதூர் செல்லும் வழியில் உள்ள குறள் நகர் அருகே, 15வது நிதி குழு மானியத்தில், 96 லட்ச ரூபாய் செலவில் புதிய பாலம், தூய்மை இந்தியா திட்டத்தில், 43.25 லட்ச ரூபாய் செலவில் கழிவுநீர் ஊர்தி, நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில், 2 கோடி ரூபாய் செலவில், 5.06 கி.மீ., தொலைவுக்கு புதிய சாலை, 1வது வார்டு குறள் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைத்தல் வளர்ச்சிப் பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.நிகழ்ச்சியில், வளர்ச்சி பணிகளை நீலகிரி எம்.பி., ராசா துவக்கி வைத்தார். கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, ஆணையாளர் சிவரஞ்சனி, துணை தலைவர் ரதி ராஜேந்திரன், இன்ஜினியர் சோமசுந்தரம், வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை