உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறவை காவடியில் பக்தர்கள் பரவசம்

பறவை காவடியில் பக்தர்கள் பரவசம்

தொண்டாமுத்துார்;ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆலாந்துறை காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடத்தப்படும். இந்தாண்டு, சித்திரை திருவிழா, கடந்த, 7ம் தேதி துவங்கியது.நாள்தோறும், காலையும்,மாலையும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம், மாலை, நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து, 201 பக்தர்கள், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.அதன்பின், அலகு குத்தியும், பறவை காவடியிலும் வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாவிளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை