உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரிடர்  மீட்புக்குவினர் வால்பாறையில் முகாம்

பேரிடர்  மீட்புக்குவினர் வால்பாறையில் முகாம்

வால்பாறை: தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, வால்பாறையில் மத்திய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.வால்பாறையில், வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்வதால், மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தாசில்தார் சிவக்குமார் துவக்கி வைத்தார்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மாலைப்பாதையில் பாறைகள் அதிக அளவில் உள்ளதால் நிலச்சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறையில் முகாமிட்டுள்ளனர்.ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ