உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு ஒழுக்கம், உழைப்பு அவசியம்

மாணவர்களுக்கு ஒழுக்கம், உழைப்பு அவசியம்

பொள்ளாச்சி:பி.ஏ., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், 16ம் ஆண்டு விழா, நடந்தது. கல்லுாரி துணைத் தலைவர் லட்சுமி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் ஆண்டறிக்கை வாசித்தார்.பி.ஏ.., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புகுட்டி தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் உழைப்பு அவசியம். இவைகளைப் பின்பற்றினால், வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்,'' என்றார்.சென்னையிலுள்ள தனியார் நிறுவன மனிதவள உதவி மேலாளர் பப்லு, கலந்து கொண்டார். தொடர்ந்து, 2023 --24 ம் ஆண்டிற்கான சிறந்த மாணவியாக சி.எஸ்.சி., துறையின் வர்சினி, மாணவர் மதிபிரகாசம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ