உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட தடகளம் பங்கேற்றவர்கள் அபாரம்

மாவட்ட தடகளம் பங்கேற்றவர்கள் அபாரம்

கோவை;மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் தடகளப்போட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6வது ஜூனியர் மற்றும் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நடந்தன.போட்டியை, ரோட்டரி மாவட்ட கவர்னர் சுந்தரவடிவேல் துவக்கி வைத்தார். வீரர் வீராங்கனையினருக்கு பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.போட்டி முடிவுகள்ஓபன் ஆண்கள் பிரிவு ஹேமர் எறிதலில் முகேஷ் குமார், ஆமோஸ், பிரதீஷ் கண்ணா; வட்டு எறிதலில், விஷ்ணு பிரசாத், வெங்கட் பாலாஜி, மாரி செல்வம்; 400மீ., ஓட்டத்தில் ரோகித், ஜெய் விக்னேஷ், மலரவன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.ஓபன் பெண்கள் பிரிவு, 1500மீ., ஓட்டத்தில் நந்தினி, கமலி, மங்கையர்க்கரசி; ஹேமர் எறிதலில் நித்யா, வினோதினி, மீனா; 400மீ., ஓட்டத்தில் எப்சிபா, ஸ்ரேயா, மேனகா; வட்டு எறிதலில் சர்மிளா, ஸ்ரீலயா, ஸ்ரீநிதி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ