உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோல்வி அடைந்த மாணவர்களை உடனடி தேர்வுக்கு தயார்படுத்தணும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

தோல்வி அடைந்த மாணவர்களை உடனடி தேர்வுக்கு தயார்படுத்தணும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

கோவை : பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத தயார்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வில் ஒரு பாடம் மற்றும் இரண்டு பாடங்களில், தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் விவரங்கள், பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2வில், தோல்வி அடைந்த மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே, உயர் கல்வி படிக்க ஏதுவாக உடனடி தேர்வு நடத்தப்படுகிறது.இரண்டு பாடங்களுக்கு மேல், தோல்வி அடைந்தவர்கள் தங்களுடைய சுமையை குறைப்பதற்கு தலைமை ஆசிரியர்கள் சார்ந்த, பாட ஆசிரியர்கள் மூலமாக இணைய வழியாகவோ அல்லது நேரடியாகவோ, அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளித்து, அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை