உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீச்சல் பயிற்சிக்கு குழந்தைகளை அனுப்புகிறீர்களா ? முதல்ல எல்லா பாதுகாப்பும் இருக்கான்னு பார்த்துக்கோங்க!

நீச்சல் பயிற்சிக்கு குழந்தைகளை அனுப்புகிறீர்களா ? முதல்ல எல்லா பாதுகாப்பும் இருக்கான்னு பார்த்துக்கோங்க!

கோடைக்காலம் என்றாலே, தண்ணீரில் விளையாடினால், குதுாகலம் ஆகிவிடுவார்கள் நம் வீட்டு சுட்டிகள்.நீச்சல் பயிற்சி என்றால் சொல்லவா வேண்டும்... துள்ளிக்கொண்டு வருவார்கள். தற்போது, பல்வேறு இடங்களில் கோடைக்கால பயிற்சி முகாம்கள், ஆங்காங்கே துவங்கிவிட்டன.பிற பயிற்சிகளை போல் அல்லாமல், நீச்சல் பயற்சிகளில் நம் குழந்தைகளை சேர்க்கும் முன் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார், நீச்சல் பயிற்சியாளர் ராஜேஷ். அவர் கூறியதாவது: உடல் வலிமைக்கு மிகவும் நன்மை தரும் பயிற்சி நீச்சல். குழந்தைகள் பயிற்சி பெறும் குளங்களில், 4 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கக் கூடாது. சிறு குழந்தைகளுக்கு தனியாக பயிற்சி இடம் வேண்டும்.நீச்சல் பயிற்சி அளிப்பவர்கள், என்.ஐ.எஸ்., சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும். அதை தவிர, நீச்சல் குளத்தை சுற்றிலும் உரிய பயிற்சி பெற்ற, உயிர் காக்கும் சேவகர்கள் கண்காணிப்பு பணியில் எப்போதும் இருக்க வேண்டும்.குழந்தைகள் பயிற்சி பெறும் போது, எதிர்பாராத விதமாக மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அதை கையாள, உரிய முதலுதவி பயிற்சி பெற்றவர்களாக பயிற்சியாளர்களும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்களும் இருப்பது அவசியம்.பாதுகாப்பு ரிங், போர்டு போன்றவை இருக்க வேண்டும். முக்கியமாக, பெற்றோருக்கான காத்திருப்பு இடம், நீச்சல் குளத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும். ஒரு சில பயிற்சியாளர்களின் அலட்சியத்தால், விபத்துக்கள் நடக்க வாய்ப்புண்டு.இதுவரை விபத்து நடந்த அனைத்து இடங்களும், பெற்றோருக்கு அனுமதி இல்லாத இடமாகவே இருந்துள்ளது. பயிற்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்து, சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். பயிற்சியின் போது, சாக்லேட், சூயிங்கம் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் வாயில் வைத்து இருக்கக்கூடாது.கொரோனா காலத்திற்குப் பின், நுரையீரல் பாதிப்பு பலருக்கு உள்ளது. நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்த, நீச்சல் பயிற்சி கட்டாயம் உதவும்.இவ்வாறு, அவர் கூறினார். பெற்றோருக்கான காத்திருப்பு இடம், நீச்சல் குளத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும். இதுவரை விபத்து நடந்த அனைத்து இடங்களும், பெற்றோருக்கு அனுமதி இல்லாத இடமாகவே இருந்துள்ளது. குழந்தைகள் பயிற்சி பெறும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அதை கையாள, உரிய முதலுதவி பயிற்சி பெற்றவர்களாக பயிற்சியாளர்களும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்களும் இருப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை