உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராகுலை தரக்குறைவாக பேசுவதா!

ராகுலை தரக்குறைவாக பேசுவதா!

கோவை : காங்., எம்.பி., ராகுல் குறித்து தரக்குறைவாக பேசியவர் மீது, நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு காங்., மனித உரிமைதுறையின் சார்பில், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளிக்கப்பட்ட புகார் மனுவில், 'புத்தர் போதனைகள் என்ற முகநுால் பதிவில் காங்., எம்.பி., ராகுலை, 'முகலாய வம்சத்தின் மிச்சம் இவன்', 'வாடிகன் வம்சத்தின் எச்சம் இவன்' என்று ஒருமையிலும், மதக்கலவரத்தை துாண்டும் விதமாகவும், ஒருவர் பதிவிட்டுள்ளார். எனவே, வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை