| ADDED : ஆக 04, 2024 10:06 PM
வால்பாறை: குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பால் மிக அவசியம் என்று, உலக தாய்ப்பால் வார விழாவில் டாக்டர்கள் தெரிவித்தனர்.வால்பாறை அரசு மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு, கர்ப்பிணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா தலைமை வகித்தார்.விழாவில், அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர் பிரதீப், டாக்டர் மகேஷ்ஆனந்தி ஆகியோர் பேசும் போது, 'பிரசவத்திற்கு முன்னும், பின்னும் பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுத்தால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.தாய் பாலுாட்டுவதால், தாய்க்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் அதிக ரத்தபோக்கு மற்றும் ரத்தசோகை குறைகிறது. கர்ப்ப காலத்தில் அதிகரித்த உடல் எடை குறையும். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே குறைந்தது, இரண்டு ஆண்டாவது இடைவெளி வேண்டும்,' என்றார்.