உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏமாற வேண்டாம்... ஜாக்கிரதை; எச்சரிக்கிறார் பாஸ்போர்ட் அதிகாரி

ஏமாற வேண்டாம்... ஜாக்கிரதை; எச்சரிக்கிறார் பாஸ்போர்ட் அதிகாரி

கோவை : 'பாஸ்போர்ட் வினியோகத்துக்கு பணம் அனுப்புங்கள் என்று, குறுஞ்செய்தி வாயிலாக யாராவது 'லிங்க்' அனுப்பினால், அதை நம்பி ஏமாற வேண்டாம்,'' என, எச்சரிக்கை விடுக்கிறார், கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, 1,000 ரூபாய் கட்டணமும், 18 வயதுக்கு மேல் 1,500 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும், 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், 10 சதவீத தள்ளுபடியும், 60 வயதுக்கு மேற்பட்டு, முதல்முறையாக விண்ணப்பிப்போருக்கு 1,500 ரூபாய் கட்டணத்தில் இருந்து, 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் 'ஜம்போ புக்லெட்'க்கு கூடுதல் கட்டணமாக 500 ரூபாயும், 'தட்கல்' முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு, கூடுதல் கட்டணமாக 2,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தபாலில் பாஸ்போர்ட் வினியோகம் உட்பட, பல்வேறு கட்டணங்களும் இதில் அடங்கும். ஆனால், ஏமாற்றும் நோக்கில் யாராவது, 'பாஸ்போர்ட் வினியோகத்துக்கு, பணம் அனுப்புங்கள் என, மொபைல் போன் எண்ணுக்கு, 'லிங்க்' அனுப்பி வைத்தால், அதை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி