உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் பயிற்சி டாக்டரை ஏமாற்றிய டாக்டர்

பெண் பயிற்சி டாக்டரை ஏமாற்றிய டாக்டர்

கோவை:திருமணம் ஆனதை மறைத்து, பெண் பயிற்சி டாக்டரை ஏமாற்றிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கோவையை சேர்ந்தவர், 27 வயது பெண் டாக்டர். வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 2022-ம் ஆண்டு டிச.,ல் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டராக சேர்ந்தார். அங்கு டாக்டராக பணிபுரிந்து வந்த ஷியாம்சுந்தர், 30 பழக்கமானார். ஷியாம் சுந்தர் தனக்கு திருமணமாகவில்லை என்றும், பெண் டாக்டரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். இருவரும் நெருங்கிப்பழகினர்.விரைவில் திருமணம் செய்வதாக கூறி, பெண்ணை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார். சில மாதங்களுக்குப் பின், ஷியாம்சுந்தர், கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு, பணி மாறுதல் செய்யப்பட்டார். பயிற்சி முடிந்த பின், பெண் டாக்டரும் கோவை வந்தார். திருமணம் குறித்து கேட்டவுடன், ஷியாம்சுந்தர் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.இதன் பின்னர்தான், ஷியாம்சுந்தருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஆண் குழந்தை இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பெண் டாக்டர் கோவை கிழக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் ஷியாம்சுந்தர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
ஜூலை 22, 2024 08:58

நம்ம உடம்புலயும் மச்சம் இருக்கலாம் .... ஆனா ஷியாம்சுந்தருக்கு மச்சத்துலதான் உடம்பே .....


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை