உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனவு இல்லம் திட்டம்; பயனாளிகள் தேர்வு

கனவு இல்லம் திட்டம்; பயனாளிகள் தேர்வு

உடுமலை : பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச்சேர்ந்த, குடியிருப்பு இல்லாமல் குடிசை வீடுகளில் உள்ளவர்களுக்கான திட்டமாக, கனவு இல்லம் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், ஒரு பயனாளிக்கு, 3.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்ட அளவில், நடப்பாண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பயனாளிகளும் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.இதில் உடுமலை வட்டாரத்தில், 74 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். திட்டத்தை துவங்குவதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கூடுதல் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு, மீண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்வதற்கான கணகெடுப்பு பணிகள் நடக்கிறது.ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு, முதற்கட்டமாக குடிசை வீடுகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.அது இல்லாத பட்சத்தில், அடுத்தகட்டமாக சிதிலமடைந்த ஓட்டு வீடுகளில் வசிப்போர் திட்டத்தில் பயன்பெறலாம். இதற்கான நிதிஒதுக்கீடு ஒவ்வொரு கட்டமாக விடுவிக்கப்படும்.தற்போது கூடுதல் பயனாளிகள் தேர்வு செய்வதற்கான கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ