உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜன்னலை திறங்கள்... நன்றாக காற்று வரட்டும்...!

ஜன்னலை திறங்கள்... நன்றாக காற்று வரட்டும்...!

ஒரு அறைக்கு, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், புதிய காற்று தேவைப்படுகிறது. அதற்கு உதவுவது, ஜன்னல்.இதுகுறித்து விரிவாக தெரிவிக்கிறார், கொசினா முன்னாள் தலைவர் பாலமுருகன்:ஜன்னல் என்பது ஒரு அழகு பகுதி மட்டும் அல்ல. ஆரோக்கியத்தின் திறவுகோல். ஜன்னல் கதவுகளை மூடி வைப்பது, அதை வைத்ததற்கு உண்டான பலன் கிடைக்காது. இதை மூடி வைப்பதற்கு, வெளிப்புறத்தில் உள்ள துாசு, மண், கொசு, பூச்சிகள் வருகிறது என்று நிறைய காரணங்களை, கட்டட உரிமையாளர்கள் சொல்வதுண்டு. கொசு, பூச்சிகள் வருவதை தடுக்க கொசுவலை தடுப்பான்கள் கிடைக்கின்றன. இதில், துாசு, மண் துகள் கூட அடைபடும். ஜன்னல் வைத்த பிறகு, அறைகளின் பயன்பாடு பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதே நேரம், பயன்பாட்டை விட, ஜன்னலில் இருந்து விசாலமாக காற்று வர வேண்டும் என்பது மிக, மிக முக்கியம். இதற்கு முன்னுரிமை தர வேண்டும்.

எப்படி அமைக்க வேண்டும்?

ஜன்னல் வைக்கும் முறையானது, ஜன்னல் கதவு திறக்கும் அமைப்பு, காற்று வீசும் திசைக்கு அதாவது, வடகிழக்கில் இருந்து காற்று வரும் என்றால், ஜன்னல் கதவு அமைப்பு, வட கிழக்கு காற்று ஜன்னல் வழியாக வரும்படி அமைக்க வேண்டும். தென்மேற்கு என்றால், அதற்கு ஏற்றார் போல் அமைக்க வேண்டும். இது, கட்டடத்தின் இடதுபுறம், வலது புறம் அறைகளுக்கு அறை மாறுபடும். எல்லா அறைகளுக்கும் ஒரே மாதிரி ஜன்னல் அமைப்பு அமைக்கக் கூடாது.ஜன்னல் வைக்கும் சமயத்தில் அல்லது கட்டட வரைபடம் தயாரிக்கும் சமயத்தில், கட்டப் போகும் கட்டடத்தின் அருகில் இருக்கும் கட்டடத்தில் உள்ள ஜன்னல் எதிர்ப்புறம், ஜன்னல் வரும்படி அமைப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இரு கட்டடத்தில் உள்ளவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும் நிலை உருவாகும்.அறைகளின் இணைப்பாக உள்ள சுவரில் இருந்து, குறைந்தது ஒன்றரை அடி முதல் இரண்டு அடி விட்டு ஜன்னல் அமைப்பது பிற்காலத்தில் பயன்தரும். ஜன்னல் வைக்கும் முன், குறிப்பிட்ட பகுதியில் காற்று எப்படி வருகிறது என்பதை அறிந்த பின் அமைக்க வேண்டும்.முக்கியமாக, ஒரு அறைக்கு, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், புதிய காற்று தேவைப்படுகிறது. இதற்கு முதல் அடித்தளம், ஜன்னல் என்றால் மிகையல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 98420 40433.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ