உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மன்னீஸ்வரர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி

மன்னீஸ்வரர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி

அன்னுார் : அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவி நிறுவ, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில், 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவி கோவிலின் வடக்கு பகுதியில் பிரகாரத்தில் பொருத்தப்பட்டது.இதன் வாயிலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அருந்த பக்தர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இக்கருவியை, அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை