போதையில்லா சமுதாயம் முன்னாள் டி.ஜி.பி., பேச்சு
பொள்ளாச்சி:போதையில்லா சமுதாயம் உருவாவதற்கு மாணவர்கள் முன்னுதாரணமாக இருத்தல் வேண்டும் என, முன்னாள் டி.ஜி.பி., அறிவுறுத்தினார்.பொள்ளாச்சி, திப்பம்பட்டி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரித் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். மாணவி நந்தனா அனைவரையும் வரவேற்றார்.தமிழக முன்னாள் டி.ஜி.பி., ரவி கலந்து கொண்டு பேசுகையில், ''போதை இல்லாத சமுதாயம் உருவாவதற்கு மாணவர்கள் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். கல்லுாரி பருவத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்வில் உச்ச நிலையை அடைய வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, புதுமுக மாணவர்கள் தங்களது பெற்றோர்களை வழிபட்டனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்லுாரி துணைத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில், மாணவி கமலி நன்றி கூறினார்.