உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொசு உற்பத்தி அதிகரிப்பு கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கொசு உற்பத்தி அதிகரிப்பு கட்டுப்படுத்த வலியுறுத்தல்

உடுமலை : மழைக்குப்பிறகு அதிகரித்துள்ள கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளில், பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது.விளைநிலங்கள் மற்றும் ரோட்டோரங்களில், புற்கள் முளைத்து பசுமை திரும்பியுள்ள நிலையில், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. நன்னீர் மற்றும் கழிவு நீரில், உற்பத்தியாகும் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கொசு ஒழிப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை