உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடை மீது ஆக்கிரமிப்பு; சாக்கடை கால்வாய் அடைப்பு

சாக்கடை மீது ஆக்கிரமிப்பு; சாக்கடை கால்வாய் அடைப்பு

சுகாதார சீர்கேடு

கிழக்கு மண்டலம் 60 வார்டு தேவேந்திர குல வேளாளர் வீதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாய் தனி நபர்களால், சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டு, வேலி போட்டு அடைக்கப்பட்டதால், சாக்கடை செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொசுக்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.-சந்திரன்,தேவேந்திர குல வேளாளர் வீதி

சத்தத்தால் அச்சம்

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பஸ்களிலும், தனியார் வாகனங்களிலும் லாரிகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. மோட்டார் வாகன அதிகாரிகள் பறிமுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அஞ்சனா, டவுன்ஹால்.

தெருநாய் தொல்லை

நவ இந்தியா, ஆவராம்பாளையம் -எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியம் சாலையில் தெரு நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது. காலையில் நடை பயிற்சி செல்பவர்களும், மாலையில் பள்ளி மாணவர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி. மகேந்திரன்,நவ இந்தியா.

நிரம்பி வழியும் கழிவு நீர்

மேட்டுப்பாளையம் சாலை, ஸ்ரீவத்சா அபார்ட்மென்ட் அருகில், சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.- நமச்சிவாயம், மேட்டுப்பாளையம் சாலை.

விபத்து அபாயம்

கோவைப்புதுார் வார்டு 90ல், சாந்தி ஆஷ்ரம் பின்புறம் ரோட்டில் தினமும் குதிரைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும், பள்ளி குழந்தைகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். விபத்து அபாயம் அதிகரித்துள்ள சூழலில், உடனே இதற்கு தீர்வு காண வேண்டும்.- பிரபாகரன், கோவைப்புதுார்.

மெயின் ரோட்டில் பைப்

சாய்பாபா காலனி மெயின் ரோட்டில், விபத்து ஏற்படுத்தும் வகையில் பைப் நீண்ட நிலையில் வெளியே நீட்டி வைத்துள்ளனர். இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும்.--லெனின், சாய்பாபாகாலனி .

மஞ்சள் நிறத்தில் உப்பு தண்ணீர்

சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி மாரியம்மன் கோவில் வீதியில், கடந்த ஐந்து மாதங்களாக உப்பு தண்ணீர் மஞ்சளாக வருகிறது. பேரூராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வேறு வழியின்றி இந்த நீரையே, இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறோம்.--ராஜேஷ், மாரியம்மன் கோவில் வீதி.

வாகனங்கள் செல்ல இடையூறு

தடாகம் ரோடு இடையர்பாளையம் பிள்ளையார் கோவில் வீதி, 8 அடி ரோட்டில் ஜியோ மின் கம்பம் சரியான இடத்தை தேர்வு செய்யாமல் போட்டுள்ளதால், கார் போக வழி இல்லாமல் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.- ராஜ்குமார், இடையர்பாளையம்.

பராமரிப்பில்லாத பூங்கா

கருப்புசாமி நகர், செந்தில் நகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. புதர்மண்டி கிடப்பதால், பூச்சிகள், கொசுக்கள் தொல்லை அதிகம் உள்ளது. குழந்தைகள் விளையாடும் சறுக்கு, ஊஞ்சல் அனைத்தும் துருப்பிடித்து உள்ளது.-கீதா,கருப்புசாமி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ