உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி முக சித்திரம்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி முக சித்திரம்

கோவை;ரத்தினம் கல்லுாரி மாணவர்கள், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, முகத்தில் சித்திரம் வரையும் நிகழ்ச்சியை நடத்தினர்.லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லுாரி மாணவ, மாணவியர் லோக்சபா தேர்தலுக்காக முகத்தில் சித்திரம் வரையும் நிகழ்ச்சியை நடத்தினர்.100 சதவீத வாக்களிப்பு இலக்கை அடையும் பொருட்டும், முதல் முறை வாக்களிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், முகத்தில் பல வண்ணங்களில் இடம்பெற்ற ஓவியங்கள், பார்வையாளர்களை கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை