உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொது அமைதிக்கு  பங்கம் விளைவிக்கும் முகநுால் பதிவு

பொது அமைதிக்கு  பங்கம் விளைவிக்கும் முகநுால் பதிவு

கோவை: பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் முகநுாலில் அவதுாறு செய்தி பதிவிட்டது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.கோவையை சேர்ந்த உமர் பரூக் என்பவர் தனது முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த பதிவை, சிக்கந்தர் பாஷா மற்றும் அன்வர் ஹூசைன் ஆகியோர், தங்கள் முகநுால் பக்கத்தில் பதிவிட்டு, அவதுாறு செய்தியுடன் பரப்புரை செய்திருந்தனர்.இது, பிற அமைப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், இரு சமூகத்தினரிடையே கலவரத்தை துாண்டும் வகையிலும் இருப்பதாகக்கூறி, பெரியகடை வீதி போலீசார் தாமாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல், அன்வர் ஹூசைன் என்பவர் தனது முகநுால் பக்கத்தில், இஸ்ரேலில் நடக்கும் போரை குறிப்பிட்டு பதிவு செய்திருந்தது, இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி, செல்வபுரம் போலீசார் தாமாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்