உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் அதிர்ச்சி

வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் அதிர்ச்சி

கிணத்துக்கடவு, - கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்தும், விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது.இந்த வாரம் செவ்வாழை கிலோ - 60, பூவன் - 34, நேந்திரன் - 42 , கதளி - 50, சாம்பராணி வகை - 15, ரஸ்தாளி - 20 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த வாரம் செவ்வாழை மற்றும் கதளி கிலோ - 10 ரூபாய், சாம்பராணி வகை - 15, ரஸ்தாளி - 20, நேந்திரன் - 23 ரூபாய் விலை சரிந்துள்ளது. மேலும், பூவன் வகை பழம் மட்டும் கிலோவுக்கு, 2 ரூபாய் அதிகரித்துள்ளது.வாழைத்தார் விலை உயரும் என காத்திருக்கும் நிலையில், விலை சரிந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை