உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை கள்ளை கேரளாவில் விற்க கலெக்டர் அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை கள்ளை கேரளாவில் விற்க கலெக்டர் அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை:கோவையில் கள் மற்றும் நீரா பானங்களை இறக்கி, கேரளாவில் விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது. நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத் தலைவர் பாபு, கலெக்டர் கிராந்திகுமாரை நேரில் சந்தித்து விடுத்த வேண்டுகோள் வருமாறு: கடந்த 2009 ம் ஆண்டு முதல், விவசாயிகள் பனை தென்னை மரங்களிலிருந்து நீரா பானத்தையும் கள்ளையும் இறக்கி விற்பனை செய்ய, தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு, போராடி வருகிறோம். 2011ம் ஆண்டு, தமிழக முதல்வர் கருணாநிதி, நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷனை அமைத்தார். அந்த கமிஷன் அறிக்கையை, இன்று வரை தமிழக அரசு வெளியிடவில்லை. அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். கோவை மாவட்டத்திலிருந்து, அருகில் உள்ள கேரள மாநிலத்துக்கு அனைத்து காய்கறியையும், நமது விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.அது போன்று, பனை தென்னை மரங்களில் இருந்து கள் மற்றும் நீரா ஆகியவற்றை இறக்கி கொண்டு சென்று, விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், பனை, தென்னை மரங்களிலிருந்து, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி உள்ளது. அது போல, நமது தமிழக விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.நம் நாட்டிற்குள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்ற, இந்திய நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு, அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். கோவை மாவட்டத்திலிருந்து, அருகில் உள்ள கேரள மாநிலத்துக்கு அனைத்து காய்கறியையும், நமது விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். அது போன்று, பனை தென்னை மரங்களில் இருந்து கள் மற்றும் நீரா ஆகியவற்றை இறக்கி கொண்டு சென்று, விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை