உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை மழை பொழிவுக்கு காத்திருக்கும் விவசாயிகள்

கோடை மழை பொழிவுக்கு காத்திருக்கும் விவசாயிகள்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில் உள்ள விவசாயிகள், சோளம் சாகுபடி செய்ய மழைக்காக காத்திருக்கின்றனர்.கிணத்துக்கடவு பகுதியில் அதிகளவு தென்னை விவசாயமே உள்ளது. மீதம் உள்ள பகுதியில் பிற வகை காய்கறிகள் மற்றும் தானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதியில், மானாவாரி விவசாயம் அதிக அளவு செய்யப்படுவதால் விவசாயிகள் கோடை மழைக்காக காத்திருக்கின்றனர்.கோடை மழைக்கு தயாராகும் விதமாக, விவசாயிகள் கோடை உழவு செய்துள்ளனர். மழை பொய்த்து போனதால், சில விவசாயிகள் தங்கள் நிலத்தில் சிறிய அளவில் மட்டுமே சோளம் விதைத்துள்ளனர்.மழை பெய்யும் பட்சத்தில், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரியாக சோளம் பயிரிட தயாராக உள்ளனர். தேவையான விதை வேளாண் அலுவலகத்தில் இருப்பு உள்ளது. தற்போது இருக்கும் நீரை தென்னை விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'மழை பெய்தால் மட்டுமே சோளம் மற்றும் பிற வகை பயிர்களை பயிரிடமுடியும். இல்லை என்றால் தற்போது இருக்கும் நீர் ஆதாரங்களை கொண்டு தென்னை மரங்களை மட்டுமே காப்பாற்ற முடியும். மழை பெய்து சோளம் சாகுபடி செய்தால், இந்தாண்டு கால்நடை தீவனத்துக்கு பிரச்னை இருக்காது. இல்லாவிட்டால், தீவன தட்டுப்பாடு ஏற்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ