உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சந்தோஷத்தால் வந்த சண்டை

சந்தோஷத்தால் வந்த சண்டை

பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு முன், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., என, மூன்று கட்சிகளின் தொண்டர்களும் திரண்டு நின்றனர். தி.மு.க., முன்னணி நிலவரம் தெரிந்து கொண்டே இருந்ததால், தி.மு.க.,வினர் ஆரவாரம் செய்ய துவங்கினர்.அ.தி.மு.க., தொண்டர்கள் அதிகளவு இருந்தாலும், தொடர் பின்னடைவில் இருந்ததால், எவ்வித ஆரவாரமும் செய்யாமல் கலைந்தனர். பா.ஜ., கட்சியினர் 'ஜமாப்' ஏற்பாடு செய்திருந்தனர். பா.ஜ., வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு வந்தாலும், இந்திய அளவில் பா.ஜ., கூட்டணி வெற்றியை கொண்டாடும் வகையில், 'ஜமாப்' அடித்து, உற்சாகமாக ஆடினர்.தி.மு.க.,வினர் வெற்றியை கொண்டாட, பட்டாசுகள் வெடித்து நடனம் ஆடினர். ஒரு கட்டத்தில், தி.மு.க., - பா.ஜ., தரப்பினர் மோதிக்கொண்டனர். போலீசார், இரு தரப்பினரையும் விரட்டினர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை