உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் நடந்த தீத்தடுப்பு ஒத்திகை

அரசு மருத்துவமனையில் நடந்த தீத்தடுப்பு ஒத்திகை

கோவை:கோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டால் எதிர்கொள்வது குறித்து, விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நடந்தது.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா முன்னிலையில் நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி தலைமையிலான வீரர்கள், செயல்விளக்கம் அளித்தனர்.தீயணைப்புத் துறையின், 'ஸ்கை லிப்ட்' வாகனத்தைப் பயன்படுத்தி, பல அடுக்குக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், அதை அணைப்பது மற்றும் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்விளக்கம், ஊழியர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி, தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்