உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்டீரியர் டெக்கரேஷன் பொருள் கட்டடத்தில் தீ

இன்டீரியர் டெக்கரேஷன் பொருள் கட்டடத்தில் தீ

கோவை;ஆர்.எஸ்.புரத்தில்'இன்டீரியர் டெக்கரேஷன்' பொருட்கள் இருப்பு வைத்திருந்த கட்டடத்தில்,நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.ஆர்.எஸ்.புரம், கிழக்கு சம்பந்தம் ரோட்டில், 'இன்டீரியர் டெக்கரேஷன்' பொருட்கள் இருப்பு வைத்திருக்கும்ஒரு கட்டடத்தில், நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற, கோவை வடக்கு தீயணைப்பு நிலையவீரர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர சற்று தாமதமானது. மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்