உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீன் குழம்பு மீன் குழம்பு

மீன் குழம்பு மீன் குழம்பு

செய்முறை:

முதலில், ரெசிபி செய்ய எடுத்து வைத்துள்ள மீனை கல் உப்பு சேர்த்து நன்றாக சுத்தவும் செய்யவும். பின்னர், சுத்தம் செய்து வைத்த மீனில் மஞ்சள் துாள், உப்பு, மிளகாய் துாள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்க்கவும். பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை, பத்து நிமிடம் வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு கல் உப்பு, மிளகாய் துாள், தனியா துாள் சேர்த்து கலந்துவிடவும். கெட்டியான புளி கரைசல் சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் ஊற்றி கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.பின்பு ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி பத்து நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ