உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடைவிதிப்பு

நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடைவிதிப்பு

வால்பாறை : வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இடைவிடாமல் பெய்யும் கனமழையினால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சோலையாறு அணை கடந்த, 19ம் தேதி நிரம்பியது.காற்றுடன் கனமழை பெய்வதால், வால்பாறையில் கடுங்குளிர் நிலவுகிறது. தொடர் மழையால் வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகையும் படிப்படியாக குறைந்துள்ளது.இதனிடையே, வால்பாறையில் பெய்யும் கனமழையினால், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில், சுற்றுலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்மட்டம் உயர்வு

மழை நீடிக்கும் நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.15 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,072 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,024 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 42.80 அடியாக உயர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): வால்பாறை - 17, சோலையாறு - 36, பரம்பிக்குளம் - 24, ஆழியாறு - 27, மேல்நீராறு - 63, கீழ்நிராறு - 52, காடம்பாறை - 27, மேல்ஆழியாறு - 16, வேட்டைக்காரன்புதுார் - 22, மணக்கடவு - 12, துணக்கடவு - 5, பெருவாரிப்பள்ளம் - 23, நவமலை - 19, பொள்ளாச்சி - 24 என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ