உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவினாசி ரோட்டில்  மேம்பால பணிகள்; போக்குவரத்தில் மாற்றம்

அவினாசி ரோட்டில்  மேம்பால பணிகள்; போக்குவரத்தில் மாற்றம்

கோவை: அவினாசி ரோடு மேம்பால பணிகளை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.கோவை, அவினாசி ரோடு மேம்பாலம் முதல் சிட்ரா வரை உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால், பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.அண்ணா சிலையில் இருந்து அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் லட்சுமி மில்சிலிருந்து, புலியகுளம், ராமநாதபுரம், திருச்சி ரோடு வழியாக அவினாசி ரோடு சென்றடையலாம்.அவினாசி ரோட்டில், செல்லக்கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடப்புறம் திரும்பி ரயில்வே மேம்பாலம் வழியாக காந்தி மாநகர் சென்று தண்ணீர் பந்தல் 'எஸ் பெண்ட்' வழியாக டைடல் பார்க் வழியாக அல்லது கொடிசியா அல்லது காளப்பட்டி வழியாக அவினாசி ரோட்டை சென்றடையலாம்.சிங்காநல்லுாரில் இருந்து அவினாசி ரோடு செல்பவர்கள் காமராஜர் சாலை வழியாக செல்லாமல், சிங்காநல்லுார் சந்திப்பில் இருந்து ஒண்டிபுதுார் எல் அண்ட் டி பைபாஸ் வழியாக, அவினாசி ரோட்டை அடையலாம்.வாகனங்கள் பயன்படுத்துவோர் சத்தி ரோடு, திருச்சி ரோடுகளை அடுத்த இரு வாரங்களுக்கு பயன்படுத்தி அவினாசி ரோடு, பீளமேடு, ஹோப் காலேஜ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவாரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை