உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு நாள் கண்காட்சி நிறைவு போலீசார்  குடும்பத்தினர் குஷி

நான்கு நாள் கண்காட்சி நிறைவு போலீசார்  குடும்பத்தினர் குஷி

கோவை:பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடந்து வந்த நான்கு நாள் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று நிறைவடைந்தது.கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் போலீசார் மற்றும் போலீசார் குடும்பத்தினரின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கிலான கண்காட்சி கடந்த, 20ம் தேதி துவங்கியது. இதில், வங்கிகள், போலீசார் குடும்பத்தினரின் உணவகங்கள் என, 15க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றன.காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடந்த கண்காட்சியை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார். நான்கு நாள் கண்காட்சியில் பொது மக்களும் ஆர்வமுடன் பங்கேற்று வீடு கட்ட கடன், காப்பீடு குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.இலவச யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டன. நிறைவு நாளான நேற்று, போலீசார் குடும்பத்தினருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கேரளாவை சேர்ந்த மேஜிக் நிபுணர் சம்சுதீன் மேஜிக் ஷோ நிகழ்ச்சி, குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி