உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே குடும்பத்தில் நால்வர் மிஸ்ஸிங்; போலீசார் விசாரணை

ஒரே குடும்பத்தில் நால்வர் மிஸ்ஸிங்; போலீசார் விசாரணை

கோவை;ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போனது குறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவையை சேர்ந்தவர் சுமதி, 51. இவரது மகளான கவுசல்யா, 30, 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த கவுசல்யா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முரளிதரன், 30, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், முரளிதரனின் செயல்பாடுகள் பிடிக்காத சுமதி, அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து கடந்த, 14ம் தேதி முரளிதரன் தனது குடும்பத்துடன் வீட்டை காலிசெய்து வெளியேறியுள்ளார்.சுமதி மொபைல் போனில் இருவரையும் தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுமதி அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்