உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூதாட்டம்; வி.சி., பிரமுகர் உள்ளிட்ட 10 பேர் கைது

சூதாட்டம்; வி.சி., பிரமுகர் உள்ளிட்ட 10 பேர் கைது

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், பணம் வைத்து சூதாட்டம் ஆடிய வி.சி., பிரமுகர் உள்ளிட்ட, 10 பேரை மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்து, 2 லட்சத்து, 70 ஆயிரத்து, 780 ரூபாய் பணம் மற்றும் ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மகாலட்சுமி நகர் வெங்காடசலம் என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக, மகாலிங்கபும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், பணம் வைத்து சூதாட்டம் ஆடிய, நெகமம் வடசித்துார் வெங்கடாச்சலம், 51, கோப்பனுார் புதுார் கார்த்திக்கேயன், 30, பணிக்கம்பட்டி மணிகண்டன், 42, வேட்டைக்காரன்புதுார் மணி, 58, நெகமம் ரகு, 41, ஊஞ்சவேலாம்பட்டி ரஞ்சித்குமார், 44, கோட்டாம்பட்டி சத்தியநாராயணன், 41, நேதாஜி ரோடு கணேஷ்பாபு, 44, உடுமலை சத்தியமூர்த்தி, 47, பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியைச்சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் நீலகிரி, கோவை மண்டல துணை தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளரான பிரபு, 42 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 2 லட்சத்து, 70 ஆயிரத்து, 780 ரூபாய் பணம், மூன்று இருசக்கர வாகனங்கள், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி