உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கழிவில் பற்றியது தீ!

குப்பை கழிவில் பற்றியது தீ!

போத்தனுார்:போத்தனூர், செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகத்தின் ஒரு பகுதியில், குப்பை கழிவு கொட்டப்படுகிறது. நேற்று மாலை இங்குள்ள உரம் தயாரிப்பு மையத்திற்கு எதிரே கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவில் தீ பற்றியது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால், சுற்றுப்பகுதிகளில் வசிப்போர் கடும் அவதிக்குள்ளாகினர். பொக்லைன் இயந்திர வாகனங்கள் மூலம், கழிவை பிரித்து அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்த, தீயணைப்பு படையினர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில், 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். மாலை, 5:30 மணிக்கு பற்றிய தீ இரவு, 9:00 மணியை தாண்டியும் எரிந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இதனை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை