உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை மேடாகுது குறிச்சி குளக்கரை

குப்பை மேடாகுது குறிச்சி குளக்கரை

போத்தனூர்:குறிச்சி குளக்கரையை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியை சேதப்படுத்தி, குப்பைக்கழிவு குளக்கரையில் போடப்படுகின்றன.குறிச்சி அருகேயுள்ள குறிச்சி குளம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொழுதுபோக்கு தலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு நடைபயிற்சி மேற்கொள்ள, குளத்தை சுற்றிலும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.குளத்தின் அருகே குடியிருப்போர், அவசியமின்றி உள்ளே வருவதை தவிர்க்க கம்பி வேலி போடப்பட்டது. ஆனால் இக்கம்பி வேலி, பல இடங்களில் சேதப்படுத்தப்பட்டு, குளத்தின் கரையில் குப்பை கழிவு கொட்டப்படுகிறது. இரவு நேரங்களில் திறந்தவெளி பார் ஆகவும் மாறிவிடுகிறது. இந்நிலை தொடர்ந்தால், குளம் மீண்டும் கழிவின் பிடியில் சிக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை. பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் இணைந்து, குளத்தை மேம்படுத்தியது பாழாகிவிடும். மாநகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை