உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் குடும்பத்தாருக்கு குப்பை தரம் பிரிக்க பயிற்சி

போலீஸ் குடும்பத்தாருக்கு குப்பை தரம் பிரிக்க பயிற்சி

கோவை;கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரைகளின் படி, கோவை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, போலீஸ் குடும்பத்தினருக்கான திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது.விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என எவ்வாறு தரம் பிரிப்பது என்பது குறித்து, போலீஸ் குடும்பத்தினருக்கு விரிவான வகுப்புகள் நடத்தப்பட்டன.இதில் ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர், ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயவேல், மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமால், மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், போலீசார் மற்றும் போலீஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ