உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தலுக்கான ஏற்பாடு சரியா இருக்கா; பொது பார்வையாளர்கள் ஆலோசனை

தேர்தலுக்கான ஏற்பாடு சரியா இருக்கா; பொது பார்வையாளர்கள் ஆலோசனை

- நமது நிருபர் -கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பொது பார்வையாளர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.லோக்சபா தேர்தலை கண்காணிக்க, கோவை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் வினோத்ராவ் (கோவை), அனுராக் சவுத்ரி (பொள்ளாச்சி), காவல் பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் கோவை வந்தனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன், கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான, டி.ஆர்.ஓ., ஷர்மிளா முன்னிலை வகித்தார்.வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரி வர கடைபிடிக்கப்படுகிறதா, விதிகள் மீறப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தல், கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடு.சி-விஜில் செயலி புகார் பதிவு, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, தபால் ஓட்டுப்பதிவை செயல்படுத்துதல், ஓட்டுப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ள பணிகள், தேர்தல் விதிமீறல்தொடர்பான பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் விபரம்.பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், அதிகமான கூட்டம் கூடுவதை தவிர்க்க மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெகடர் ஸ்வேதா மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை