உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கடவுள் அனைத்திலும் இருக்கிறார் தனித்தும் இருக்கிறார்: பாரதி பாஸ்கர்

 கடவுள் அனைத்திலும் இருக்கிறார் தனித்தும் இருக்கிறார்: பாரதி பாஸ்கர்

கோவை; கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' என்ற ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று துவங்கியது.'அருளாளர் ராமானுஜர்' என்ற தலைப்பில், ஆன்மிக உரையாற்றிய சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர் பேசியதாவது:ஒளியும், நிழலும் போல, உயிரும் பரம்பொருளும் வேறு என்று சொல்வது துவைதம். இந்த வேறுபாடு கிடையாது; பிரம்மம் என்பது ஒன்றுதான் என்று சொல்வது அத்வைதம். ராமானுஜர் சொன்னது விசிஷ்டாத்துவைதம்.இதன் தத்துவம் என்னவென்றால் உயிரும், உயிரற்றதும் இறைவனில் சரீரமாக இருக்கிறது. இவை ஒன்றுடன் ஒன்றாக இணைந்தும் இருக்கிறது; தனித்தும் இருக்கிறது. கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார். அதே வேளையில் அவர் தனித்தும் இருக்கிறார் என்பதுதான். இறைவனுக்கு கைங்கரியம் செய்வது, மனிதர்களில் வேற்றுமை பார்க்காமல் வாழ்வது, இறுதியாக இறைவனிடம் சரணாகதி அடைவது ஆகியவை இந்த தத்துவத்தின் அடிப்படை. விஷ்டாத்துவைத்தில் துவைதமும், அத்வைதமும் இருக்கிறது. இந்த இரண்டு தத்துவத்தையும் உள்ளடக்கி, மேம்பட்ட தத்துவமாக விசிஷ்டாத்துவைதம் இருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால் கிருஷ்ணர் சுவாமி திருக்கோவில் கார்த்திகேயன், ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் முரளிகிருஷ்ணன், சரவணம்பட்டி ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் சிரவை நாகராஜன், திருப்பூர் சேக்கிழார் புனிதப்பேரவை மூர்த்தி, குருக்கள்பட்டி கடைமடை அய்யனார் கருப்பசாமி திருக்கோவில் முருகேசன் ஆகிய ஐந்து பேருக்கு, அருள் வளர் செம்மல் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை