உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடவுள் குடுத்த கை, கால் இருக்கு மத்தவங்க பணம் நமக்கெதுக்கு!

கடவுள் குடுத்த கை, கால் இருக்கு மத்தவங்க பணம் நமக்கெதுக்கு!

வடவள்ளி:அரசு பஸ்சில் தவறவிட்ட, ரூ.1.95 லட்சம் மற்றும் 2 பாஸ்போர்ட்டை, ஒப்படைத்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் பாராட்டினர்.பாரதியார் பல்கலையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ஷர்மிளா,53. நேற்று பி.என்.புதூர் பெருமாள் கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்து, எஸ்26 என்ற அரசு பஸ்சில் ஏறி, பாரதியார் பல்கலை பஸ் ஸ்டாப்பில் இறங்கியுள்ளார்.கைப்பையை இருக்கையிலேயே விட்டு சென்றுள்ளார். மருத மலை அடிவாரம் சென்று பஸ்சை நிறுத்தியபோது, அந்த பஸ்சின் டிரைவர் முருகராஜ் கண்டெடுத்துள்ளார். பணம் அடங்கிய பையை, மருதமலை டிப்போ செக்யூரிட்டி கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளார்.மூவரும் பையை, வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் அண்டோரோ வில்சனிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து, சர்மிளாவிடம் பணப்பையை ஒப்படைத்தனர். முருகராஜ், சசிகுமார், கோவிந்தராஜ் ஆகிய மூவரையும், போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை