| ADDED : ஏப் 30, 2024 11:53 PM
கோவை:கோவை வ.உ.சி., மைதானத்தில், வரும் மே இரண்டாவது வாரத்தில், அரசு பொருட்காட்சி துவக்கப்படுகிறது.லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைக்கு உட்பட்டு, தமிழக செய்தி - மக்கள் தொடர்பு துறை சார்பில், கோவை வ.உ.சி., மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது, தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.அதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சி, இம்முறை வ.உ.சி., மைதானத்தில் நடத்தப்படும்; மே இரண்டாவது வாரத்தில் துவங்கி, 45 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும். அனைத்து அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படும். கோடை காலத்தை பொதுமக்கள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகள் அமைக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.