உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்

மாநகராட்சியில் இன்று குறைகேட்பு கூட்டம்

கோவை;கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று, மேயர் தலைமையில், மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். லோக்சபா தேர்தல் காரணமாக, சில மாதங்களாக இக்கூட்டம் நடைபெறவில்லை.புதிய மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதும், கடந்த வாரம் முதல் மீண்டும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (ஆக., 20) காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும். மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் சிவக்குமார் மற்றும் துறை தலைவர்கள் பங்கேற்பர்.பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை வசதி, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் குறித்து, பொதுமக்கள் மனு கொடுக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி