உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரக்கிளைகளை அகற்றவும் இதோ இயந்திரம் வந்தாச்சு!

மரக்கிளைகளை அகற்றவும் இதோ இயந்திரம் வந்தாச்சு!

கோவை : ரோட்டில் படர்ந்துள்ள மரங்களின் கிளைகளை அகற்ற, மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட நவீன இயந்திரம் செயல்படும் விதம் பரிசோதிக்கப்பட்டது.கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், ரோட்டோர மரங்களின் கிளைகள், மின்கம்பிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. அப்புறப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மாநகராட்சி பணியாளர்கள் மரங்களில் ஏறி கிளைகளை அப்புறப்படுத்தும் போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த, நவீன மர அறுவை இயந்திரம் வாங்கப்பட்டது. இயந்திரம் செயல்படும் விதம் குறித்து, நஞ்சப்பா ரோட்டில் உள்ள மரக்கிளைகளை அகற்றி பரிசோதிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி