உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருதய சிகிச்சைக்கு இதோ வந்தது நவீன தொழில்நுட்பம்

இருதய சிகிச்சைக்கு இதோ வந்தது நவீன தொழில்நுட்பம்

கோவை:ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதயவியல் துறை, கோவையின் முதல் அதிநவீன லேசர் கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த மருத்துவ கல்வி நிகழ்வு, அவிநாசி ரோடு, ரெசிடென்சி டவர்சில் நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதயவியல் துறையின் நிபுணர்கள், லேசரின் செயல்பாடு மற்றும் அதன் நன்மைகளை எடுத்துரைத்தனர்.லேசர் கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி தொழில்நுட்பம், இருதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக, அதே நேரத்தில் விரைவான குணமடைதலை உறுதி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.ராமகிருஷ்ணா மருத்துவமனை சீரற்ற இதயத்துடிப்பை, பலுான் குளிர்நீக்கல் கருவி மூலம் சரி செய்யும் சிகிச்சையும் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் நிகழ்வில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை