'லே ஷீரோ' நிறுவனம் சார்பில், பூச் பார்ட்டி எனும், செல்லப்பிராணிகளுக்கான பொழுபோக்கு நிகழ்ச்சி, மாதம்பட்டி, சி.எஸ்.ஆர்., லேண்ட்மார்க் ரிசார்ட்டில் நடக்கிறது. இன்று நிறைவடைகிறது.செல்லப்பிராணி வளர்ப்பவர்களைஒருங்கிணைத்து, அவர்களின் மறக்க முடியாத அனுபவங்களை பகிரும் வகையில், கோவையில் முதன்முறையாக, பூச் பார்ட்டி நடக்கிறது.இங்கு, செல்லப்பிராணிகளுக்கான விளையாட்டுகளுடன் நேற்று நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து நடந்த பேஷன் அணிவகுப்பில், வித்தியாசமான ஆடை அணிந்து, நாய்கள் வலம் வந்தன.இதன் உரிமையாளர்கள், தங்களின் நாய், பூனை, அதன் சேட்டைகள் குறித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.செல்லப்பிராணிகளுக்கான பேஷன் ஆடைகள், உணவு, இன்ஸ்டன்ட் போட்டோ பிரிண்ட், கிப்ட், பேஷன் டிரஸ் என, 10க்கும் மேற்பட்ட அரங்குகள் இருப்பதால், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.இதுதவிர, உணவு திருவிழா, குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. குடும்பத்தோடு வந்து, ஷாப்பிங் செய்து, குழந்தைகளுடன் விளையாடி, செல்லப்பிராணிகளுடன் மறக்க முடியாத அனுபவங்களை பெற நினைப்போர், இன்றைய விடுமுறையை, பூச் பார்ட்டியில் கழிக்கலாம்!சீரியல் ரசிப்பான்இது ஹஸ்கி ப்ரீட். மூன்று மாதங்களே ஆகின்றன. இதன் பெயர் நோவா. எங்க வீட்டு சேட்டைக்காரன். அம்மாவுடன் சேர்ந்து சீரியல் பார்ப்பது, விளையாடுவது, குறும்பு செய்வது என எப்போதும் எனர்ஜியுடன் இருப்பான். இவனுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்தோம்.- அகிலேஷ், குனியமுத்துார்.எங்களின் முதல் குழந்தைஎங்களின் முதல் குழந்தை பினி தான். இவனுக்கு ஒன்றரை வயது ஆகிறது. செல்லப்பிராணிகளுக்கான நிகழ்வு என்பதால் இங்கு வந்தோம். அரங்கில் இவனுக்கு சில பொருட்கள் வாங்கியிருக்கிறோம். மற்ற நாய்களுடன் எளிதில் பழகிவிட்டான்.- ஷிவம் மற்றும் தீக் ஷா, கோவைப்புதுார்.
விதவிதமாய் வித்தியாசமாய்!
n கே.எம்.போட்டோகிராபி அரங்கில், செல்லப்பிராணிகளுடன் வருவோர், புகைப்படம் எடுத்து, உடனே பிரிண்ட் செய்து கொள்ளலாம்.n டூடில் பிரிண்ட், வுட் டாய்ஸ், பேஷன் டிரஸ், வித்தியாசமான குழந்தைகளுக்கான ஸ்டேஷனரி பொருட்கள், வெள்ளி அலங்கார பொருட்கள், இயற்கை அங்காடி பொருட்களுக்கான அரங்குகளில், ஷாப்பிங் செய்யலாம்.n கோயமுத்துார் பெட் ஹாஸ்பிட்டல் அரங்கில், செல்லப்பிராணிகளுடன் வருவோருக்கு, குடற்புழு நீக்கம், தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.n 'ஹூயூமன் அனிமல் சொசைட்டி' சார்பில், செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து விளக்கப்படுகிறது.