| ADDED : ஆக 21, 2024 11:57 PM
வால்பாறை: வால்பாறையில், கம்முக்குட்டி சாலை என பெயர் பலகை வைக்க, ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்தால், பரபரப்பு ஏற்பட்டது.வால்பாறை நகர், வாழைத்தோட்டம் பகுதி செல்லும் ரோட்டிற்கு, சுதந்திர போராட்ட தியாகி கம்முக்குட்டி சாஹிப்பின் பெயர் வைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில், வாழைத்தோட்டம் ரோட்டிற்கு, கம்முகுட்டி சாலை என பெயர் பலகை வைக்கப்பட்டது.இதற்கு, வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த பெயர் பலகையை அப்புறப்படுத்தினர். இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பெயர் பலகையை நகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.