பொள்ளாச்சி:பொள்ளாச்சி கே.கே.ஜி., மண்டபத்தில், வீடு, மனை, சொந்த வீடு விற்பனை, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது.'ஆர் 2' அசோஸியேட்ஸ்' நிர்வாக இயக்குனர் குணசேகரன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.பிரைட் ஈவென்ட்ஸ் நிறுவன மேலாளர் இந்துமதி விஜயகுமார், கிளாஸ் பெவிலியனின் நிர்வாக இயக்குனர் அஸ்வத் சுந்தர்ராஜன், டிம்பர் நெஸ்ட்டின் இயக்குனர் ஹரிஷ் ராகவேந்திரன், டெக் கிளஸ்ட்ரன் நிர்வாக இயக்குனர் செல்வக்குமார், அக்வா டெக்கின் முதன்மை செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றினர்.கண்காட்சியில், வீடு, மனை அப்பார்ட்மென்ட், பர்னிச்சர், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், டைல்ஸ், கிச்சன் இன்டீரியர், பில்டிங் மெட்ரீயல்ஸ், இன்டீரியர், அக்வா டெக் நிறுவனங்கள், சோலார், கதவு, ஜன்னல் பிவிசி உற்பத்தி நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 50க்கும் அரங்குகள் அமைத்துள்ளனர்.கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது. இலவச அனுமதி, என, பிரைட் ஈவென்ட்ஸ் நிறுவனர் கூறினார்.