உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி

துணைவேந்தருக்கு கவுரவ கர்னல் பதவி

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு கெளரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்தியாவிலேயே கெளரவ பதவி சின்னத்தைப் பெறும் முதல் பெண் இவர் ஆவார்.வேளாண் பல்கலை, அதன் இணைப்பு உறுப்புக் கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படைக்கு பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில், கவுரவ கர்னல் பதவி சின்னம் வழங்கப்பட்டது.தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தேசிய மாணவர் படை மைய துணை இயக்குனர் ஜெனரல் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, துணைவேந்தருக்கு கவுரவ பதவிச் சின்னத்தை வழங்கினார்.இந்தியாவிலேயே கவுரவ பதவிச் சின்னத்தைப் பெறும் முதல் பெண் வேளாண் பல்கலை துணைவேந்தர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை, மாணவர் நல மைய முதன்மையர் மரகதம், பல்கலை தேசிய மாணவர் படை அதிகாரிகள் மனோன்மணி, சந்தோஷ் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ