உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவமனையில் கொலை: இருவரது ஜாமின் மனு டிஸ்மிஸ்

மருத்துவமனையில் கொலை: இருவரது ஜாமின் மனு டிஸ்மிஸ்

கோவை : மருத்துவமனையில் திருட முயன்றவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரது ஜாமின் மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.கோவை, காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன்,38. கூலி தொழிலாளியான இவர், கடந்த மாதம் 27ம் தேதி, சித்ரா பகுதியிலுள்ள தனியார் மருத்துவ மனை வளாகத்திற்குள் இரும்பு பொருட்களை திருட முயன்ற போது, மருத்துவமனை ஊழியர்களால் அடித்துகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக, மருத்துவமனை துணை தலைவர் நாராயணன், மேலாளர் ரமேஷ், செயலாக்கத்துறை அதிகாரி சரவணகுமார், பி.ஆர்.ஓ., சசிகுமார், பிளம்பர் சுரேஷ் , சரவணகுமார், காவலாளி மணிகண்டன், ஸ்டோர் மேலாளர் சதீஷ் குமார் ஆகியோர் பீளமேடு போலீசாரால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களில் சரவணகுமார், சதீஷ்குமார் ஆகியோர் ஜாமின் விடுவிக்க கோரி,கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி விஜயா, இருவரது ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை