உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் தகிக்கும் வெயில்... தெறிக்கும் வேட்பாளர்கள்

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் தகிக்கும் வெயில்... தெறிக்கும் வேட்பாளர்கள்

'எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்...'' என்ற நடிகர் விவேக் சொன்ன சினிமா வசனத்தை மறக்க முடியாது. இதேபோல் வேட்பாளர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். வெயில் நுாறு டிகிரிக்கு மேல் கொளுத்துவதால்தான் இந்த நிலைமை.திருப்பூர் தொகுதியில் கொளுத்தும் வெயிலில், வியர்வையில் நனைந்தபடி, ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பா.ஜ., வேட்பாளர் முருகானந்தன் விவசாய நிலங்களில் இறங்கி களையெடுப்பது, டிராக்டர் ஓட்டுவது, கரும்பு ஜூஸ் போடுவது என, விவசாயிகளை போன்றே வெயிலோடு உறவாடி, விவசாயப்பணி செய்து, ஓட்டு சேகரிக்கிறார். அதன் விளைவு, அவர் முகம் கருத்து, துவண்டு போயிருக்கிறார்.* அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம், முதன்முறை பிரசாரத்துக்கு வரும் போது, 'பளிச்' னெ வந்தவர், தற்போது சோர்வுடன் காணப்படுகிறார்.இளநீர், கரும்பு ஜூஸ், குளிர்பானம் கேட்கின்றனராம் உடன் செல்லும் கட்சியினர். 'நாம ஜெயிக்கணும்ன்னு, வெயில்ல சுத்தறாங்க; இதைக் கூட செய்யலைன்னா எப்படி' என, வேட்பாளர்களும் கணக்கு பார்ப்பதில்லை.'இன்னும் ஒரு வாரம்; சீக்கிரம் ஓடிட்டா தேவல... இல்லாட்டி மூஞ்சியே தெரியாத அளவுக்கு நிலைமை மாறிடும்' என, மனதுக்குள் பிரார்த்திக்கின்றனர் வேட்பாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை