உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் உள்ள அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 26. கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா, 21. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஊமப்பாளையத்திற்கு சென்று, கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஜூன் 1ம் தேதி ஊமப்பாளையத்திற்கு சென்ற அருண்குமார், அங்கு மனைவி சித்ராவிடம் குடும்பம் நடத்த வருமாறு வீட்டிற்கு அழைத்துள்ளார். சித்ரா வர மறுக்கவே, அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சித்ராவை குத்தினார். இதில் அவரது வலது பக்க வயிற்றில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சித்ராவை உறவினர்கள் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சித்ரா தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ