உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவால்களை சந்தித்தால் வெற்றியை ருசிக்கலாம்

சவால்களை சந்தித்தால் வெற்றியை ருசிக்கலாம்

கோவை, : நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக, மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி கல்லுாரி கையேட்டை வெளியிட, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, ஐ.ஜி.,பவானீஸ்வரி பேசுகையில், ''உங்களுக்குச் சாதகமான சூழலில் இருந்து வெளியே வந்து, சவால்களை சந்தித்தால்தான், வெற்றிகளை ருசிக்க முடியும். கல்லுாரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் தெரிந்தால், பேராசிரியர்கள், போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.கல்லுாரியின் முன்னாள் மாணவர்களான, சென்னை சம்பா பப்ளிஷிங் கம்பெனி இயக்குனர் மாருதி, எச்.ஆர்.எவிடென் டிஜிட்டல் அண்டு கிளவுட் பிசினஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம், கல்லுாரி முதல்வர் சிவக்குமார் மற்றும் புதிதாக இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த, 2 ஆயிரத்து 200 மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ