உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜமாபந்தியில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஜமாபந்தியில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு

கோவை;கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும்1433 பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நேற்று துவங்கியது. கோவை வடக்கு தாலுகாவில் நேற்று காலை 9:30 மணிக்கு ஜமாபந்தி துவங்கியது.பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோர் உதவித்தொகை பெறுதல்,இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமை திட்டம். ரேஷன்கார்டு முகவரி மாற்றம், கடை மாற்றம், பெயர் சேர்த்தல்,நீக்குதல், ஜாதிச்சான்று, வருமானச்சான்று கேட்டு நேற்று 181 மனுக்கள் பெறப்பட்டன. பெற்ற மனுக்களில் இரண்டிற்கு ரேஷன்கார்டுகளில் கடை மாற்றமும், 8 பேருக்கு பட்டா மாற்றமும் செய்து தாசில்தார் மணிவேல் உத்தரவு பிறப்பித்து அதற்கான ஆவணங்களை விண்ணப்பதாரர்களிடம் வழங்கினார். இன்றும் ஜமாபந்தி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ